Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு வியூகம் வகுத்தவர் யார்? – உண்மை வெளியானது!

In இலங்கை
Updated: 13:39 GMT, Mar 21, 2018 | Published: 13:39 GMT, Mar 21, 2018 |
0 Comments
3269
This post was written by : Varshini

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அவற்றை ஒழுங்கமைத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, இம்முறை ஜெனீவா அமர்வில் பல முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது சமூகத்தின் நிலையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்றைய பக்க அமர்வொன்றில், திகன தாக்குதல் தொடர்பான காணொளியொன்றும் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விடயங்கள் தொடர்பாக ஜெனீவாவில் இருந்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு சிறிதரன் வழங்கிய விசேட செவ்வியிலேயே சிறிதரன் மேற்குறித்த விடயத்தைக் கூறினார்.

1983ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகித்த தமிழ் மக்களின் பொருளாதார முழுகெலும்பு திட்டமிட்டு முறிக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே அண்மைய வன்முறைச் சம்பவங்களை நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய சம்பவங்கள் தற்போதும் தொடர்வதானது, யார் ஆட்சிக்கு வந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடருமென்பதை இலங்கையின் தற்கால சூழல் வெளிப்படுத்துவதாக சிறிதரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஐ.நா. பேரவை தமது நிலை குறித்து கரிசனை கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இம்முறை அதிகளவான முஸ்லிம் பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு வந்துள்ளனரென குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg