Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வீரரின் அதிரடி! – பதற்றத்தில் உயிரை விட்ட ரசிகர்

In கிாிக்கட்
Updated: 05:56 GMT, Mar 22, 2018 | Published: 05:56 GMT, Mar 22, 2018 |
0 Comments
1503
This post was written by : Puvanes

இந்தியா எதிர் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியை பார்த்து கொண்டிருந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அண்மையில் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் வகையில் ரி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இந்தியா மோதியது.

இந்தப் போட்டியை குஜராத் – சூரத் பகுதியைச் சேர்ந்த 62 வயதாக பிரவீன் படேல் எனப்படும் ஒருவர் குடும்பத்தாருடன் பார்த்து வந்துள்ளார். போட்டியில் கடைசி கட்டத்தில் 1 பந்துக்கு 5 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆட்டம் பரபரப்படைந்த போது அதிக பதற்றத்தினால் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா குறித்த போட்டியில் வெற்றி பெற்ற போதும் இந்தச் சம்பவமானது அப்பகுதியல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான குறித்த போட்டியின் இறுதி கட்டத்தில் 1 பந்துக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆறு ஓட்டத்தினை அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg