Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் தீ விபத்து: குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

In
Updated: 06:23 GMT, Mar 23, 2018 | Published: 06:23 GMT, Mar 23, 2018 |
0 Comments
1069
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோ நகரிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Sauchiehall வீதியை அண்டி அமைந்துள்ள மிகவும் பரபரப்பான விற்பனை நிலையங்களுக்கு அருகிலுள்ள விக்டோரியா களியாட்ட விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின்போது, எவரும் எந்தவித பாதிப்பை எதிர்நோக்கவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்படி களியாட்ட விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாரிய கரும் புகைமூட்டம் காணப்படுவதாகவும், ஆகையால், குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளின் யன்னல்களையும் கதவுகளை மூடுமாறும் அதிகாரிகளினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படைவீரர்கள் 120 பேர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg