Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவுடன் புதிய அத்தியாயம் தொடங்க வடகொரியா அழைப்பு

In உலகம்
Updated: 09:18 GMT, Apr 16, 2018 | Published: 09:18 GMT, Apr 16, 2018 |
0 Comments
1110
This post was written by : Suganthini

சீனாவுடன் புதிய அத்தியாயமொன்றைத் தொடங்குவதற்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியத் தலைநகர் பியோங்கியாங்கில் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

சீனாவுக்கும் வடகொரியாவுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில், புதிய அத்தியாயம் தொடங்கப்பட வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார். அத்துடன், இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கிடையில் நட்பை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் சிறந்த வாய்ப்புக் கிடைக்குமென்று தான் நம்புவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை தான் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த வடகொரிய ஜனாதிபதி கிம், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன் பயனுடைய விடயங்களைப் பரிமாறியதாகவும்,  கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)