Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வளாகத்தை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவு! – வெளிச்சக்திகளின் ஆதிக்கமா?

In இலங்கை
Updated: 08:41 GMT, Apr 25, 2018 | Published: 08:41 GMT, Apr 25, 2018 |
0 Comments
1371
This post was written by : Varshini

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து, வளாகத்தை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இச்சம்பவத்தின் பின்னணியில் வெளிச்சக்திகளின் ஆதிக்கம் காணப்படுவதாக சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் ஆலய வடிவிலான புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு அங்கு கற்கும் சிங்கள மாணவர்கள் நேற்று முன்தினம் முயற்சித்தனர். இதனால் மாணவர்களுக்கும் வளாக நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து, வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. குறித்த பிரச்சினை நேற்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்த நிலையில், சமகால விடயங்கள் தொடர்பாக ஆராயும் எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சி இவ்விடயம் தொடர்பாக நேற்று ஆராய்ந்தது.

இந்நிகழ்ச்சியில் அங்கிருந்து தகவல்களை வழங்கிய எமது பிராந்திய செய்தியாளர் பல விடயங்களை குறிப்பிட்டார்.

குறிப்பாக மாணவர்களால் கொண்டுவரப்பட்ட ஆலய வடிவிலான சிலை சுமார் 5 இலட்சம் பெறுமதியானதென தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அதனை கொள்வனவு செய்ய மாணவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்ததென்ற கேள்வி எழுந்துள்ளதாக களத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வளாக முதல்வரிடம் கேள்வியெழுப்பியபோது, இச்சம்பவத்தின் பின்னணியில் யாரேனும் இருக்கலாமென்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த முரண்பாடு ஏற்பட்ட பின்னர் தங்களது நிர்வாக கட்ட தொகுதியை சூழ்ந்து புலனாய்வாளர்களும் பொலிஸாரும் காணப்பட்டதாகவும் வளாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வளாகத்தில் சகல மதங்களையும் பிரதிபலிக்கும் வணக்கஸ்தலங்களை நிறுவுவதற்கான திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அரை ஏக்கர் வீதம் அதற்கான காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், தனிப்பட்ட ரீதியில் வளாகத்தில் பௌத்த வணக்கஸ்தலத்தை அமைப்பதற்கு முயற்சித்தமையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg