Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறுமைப்படும் வீடிழந்த தாய்மாருக்கு உணவளித்தனர்: அமெரிக்காவில் அன்னையர் தினச்சிறப்பு

In
Updated: 05:32 GMT, May 13, 2018 | Published: 05:32 GMT, May 13, 2018 |
0 Comments
1060
This post was written by : Johnson paiva

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ஸ்கிட்ரோ எனும் நகரத்தில் வறுமைப்படும் வீடிழந்த தாய்மாருக்கு Fred Jordan Mission உறுப்பினர்கள் உணவளித்தனர்.

அமெரிக்காவில் நேற்று (சனிக்கிழமை) அன்னையர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் Los Angeles’ Skid Row எனும் இடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் ஒவ்வொருவருக்கும் அன்னையர் தினத்துக்கான மலர் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுவையான பாஸ்தா, புளுபெர்ரி கேக் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது மேலும் நிகழ்வின் முடிவில் எல்லோருக்கும் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் அங்கு வந்திருந்த பெண்களில் 59 வயதான penni davis என்பவர் பேசுகையில் இந்த நகரத்தில் வசிக்கும் 55000 வீடற்ற தாய்மாரில் அவரும் ஒருவர் எனவும் தாய் என்ற அங்கீகாரம் அவருக்கு மிக முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வின் மூலம் அவர் தனது தற்கால வாழ்க்கையில் இன்றுதான் கூடாரத்திலிருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதனை நடத்துபவர்கள் தமக்கு ஒப்பனை செய்து மகிழ்விப்பதாகவும் கூறினார். மேலும் சில பெண்கள் தமது சந்தோசத்தினை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்நிகழ்வினை நடத்திய Fred Jordan Mission 1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு வருடமும் அன்னையர் தினத்தை சிறப்பித்துவருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் Fred இன் மனைவி Willie இந்த Fred Jordanஅறக்கட்டளையின் தாயாக இருந்து வருவதாகக் கூறினார் மேலும் அவர் பேசுகையில் இந்த வீதிகளில் தாய்மார்களைப் பார்ப்பது மிகவும் துயரமானது என்றும் கலிபோர்னியாவில் வீடில்லாமல் வாழும் தாய்மாரின் அளவு 2016 முதல் 2017 வரை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)