Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நள்ளிரவில் நஜிப் வீட்டில் திடீர்சோதனை: மலேசியப் பொலிஸ்

In
Updated: 03:19 GMT, May 17, 2018 | Published: 03:19 GMT, May 17, 2018 |
0 Comments
1087
This post was written by : Johnson paiva

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் ஆயுதமேந்திய பொலிஸார் திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு நஜிப் ரசாக் தனது பிரார்த்தனைக்குச் சென்று திரும்பிய பின்னர் இடம்பெற்றுள்ளதகாத் தெரியவந்துள்ளது.

குறித்த இந்த சோதனையின்போது நஜிப் ரசாக்கின் வீட்டிற்கு வெளியில் 108 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருந்த போதிலும் சோதனை நடத்தப்பட்டதன் காரணத்தினை பொலிஸார் தெரிவிக்கவில்லை. இதேவேளை நஜிப் ராக்கிற்குச் சொந்தமான குடியிருப்புக் கட்டடம் அமைந்திருக்கும் இன்னுமொரு மாவட்டத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தற்போதைய பிரதமர் மொஹமட் மஹதிர் கூறுகையில் “முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கினால் நிறுவப்பட்ட 1MDB மாநில நிதியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான ஆதாரங்களைத் தேடுவதற்காகவே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டது” என்றார்.

நஜிப் ரசாக் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னர் அவரது மனைவி ரொஷ்மா மன்சோராவுடன் வெளிநாடு செல்லத்திட்டமிட்டிருந்த நிலையில் மலேசிய அரசாங்கம் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)