Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டி வில்லியர்ஸ் அபாரம்: பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது பெங்களூர் அணி!

In
Updated: 03:58 GMT, May 18, 2018 | Published: 03:58 GMT, May 18, 2018 |
0 Comments
1023
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

நேற்று (வியாழக்கிழமை) பெங்களூரில் நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக டி வில்லியர்ஸ் 69 ஓட்டங்களையும், மொயின் அணி 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ராஷித் கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 219 என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹைதராபாத் அணியால், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்கள் நிறைவில் 204 ஓட்டங்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதனால் அந்த அணி 14 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்ட டி வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)