Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களின் தியாகங்கள் வீண்போகாது: சுமந்திரன்

In இலங்கை
Updated: 09:30 GMT, May 18, 2018 | Published: 06:24 GMT, May 18, 2018 |
0 Comments
1184
This post was written by : Ravivarman

ஒன்பது வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்கள் வீண்போகாது என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் மக்களின் தியாகங்களுக்கான பிரதிபலன் வரப்போகின்ற சந்ததிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினத்தை எம்மக்களோடு இணைந்து துக்க தினமாக அனுஷ்டிக்கின்றது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் செய்த அளப்பெரிய தியாகங்களுக்கான பிரதிபலன்கள் வரப்போகின்ற எமது எதிர்கால சந்ததியினருக்கு பூரணமாகக் கிடைக்க வேண்டும்.

இந்தத்தியாகங்கள் வீண்போகாமல் நீதியோடும் நியாயத்தோடும் சம உரிமைகளோடு எங்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுவாழ்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)