Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள

In இலங்கை
Updated: 13:30 GMT, May 22, 2018 | Published: 13:27 GMT, May 22, 2018 |
0 Comments
1226
This post was written by : Jeyachandran Vithushan

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பொது விவாதத்துக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சவாலை இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது டுவிட்டர் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ளார்.

தேசிய கடன் தொடர்பிலேயே பகிரங்க விவாதம் நடத்தவுள்ளதாகவும் இதில் முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி தெரிவித்த வந்த நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர இந்த சவாலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg