Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி வெற்றி

In இந்தியா
Updated: 10:39 GMT, May 25, 2018 | Published: 10:39 GMT, May 25, 2018 |
0 Comments
1110
This post was written by : Kemasiya

கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்த ம.ஜ.த. தலைவரும் கர்நாடகா முதல்வருமான குமாரசாமி வெற்றியை தனதாக்கி கொண்டார்.

இன்று காலை முதல் நடத்தப்பட்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ம.ஜ.த. மற்றும் காங்கிரஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களித்து வந்த நிலையில், குமாரசாமியே வெற்றி பெறுவார் என கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில் இறுதி முடிவில் 117பேரின் வாக்குகளை பெற்று கர்நாடகா முதலமைச்சர் பதவியை குமாரசாமி தக்கவைத்தார்.

அண்மையில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. எனினும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை அது கொண்டிருக்கவில்லை.

என்ற போதிலும் பா.ஜ.க.வை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் எடியுரப்பா  முதல்வராக பதவியேற்றார். அத்துடன் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக ம.ஜ.த. மற்றும் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை (19.05.) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நீதிமனக்றம் உத்தரவிட்டது.

எனினும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் எடியுரப்பா பதவியை ராஜினமா செய்திருந்த நிலையில் ம.ஜ.த. மற்றும் காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்குமாறு ஆளுர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய கடந்த புதன்கிழமை கர்நாடகா முதல்வராக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்து. இதற்கமைய இன்று குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg