Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா தோல்வி!

In கிாிக்கட்
Updated: 08:16 GMT, Jun 14, 2018 | Published: 08:16 GMT, Jun 14, 2018 |
0 Comments
1032
This post was written by : Anojkiyan

பல்வேறு நெருக்கடிகள், எதிர்மறையான விமர்சனங்கள் என்பவற்றுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அவுஸ்ரேலிய அணி.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு ரி-ருவென்ரி போட்டியில் விளையாடுகின்றது.

இதற்கமைய பந்தின் தன்மையை மாற்ற முயன்ற விவகாரத்தில் சிக்கி மூன்று முக்கிய வீரர்களை இழந்தது மட்டுமல்லாமல், அணியின் பயிற்சியாளரையும் இழந்து வலுவிழந்த அணியாக பேசப்படும் அவுஸ்ரேலிய அணி, முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.

நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, 47 ஓவர்கள் நிறைவில் 214 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிளென் மேக்ஸ்வெல் 62 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மொயின் அலி, லியம் பிளெங்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 44 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் இயான் மோர்கன் 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சு சார்பில் பில்லி ஸ்டான்லேக், மைக்கேல் நீஸர், ஹொன்ரிவ் டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் 17 ஓட்டங்களையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு துணைநின்ற மொயின் அலி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)