Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் இரும்பு ஆலையை திறந்து வைத்தார் மோடி

In இந்தியா
Updated: 11:23 GMT, Jun 14, 2018 | Published: 11:22 GMT, Jun 14, 2018 |
0 Comments
1059
This post was written by : Kemasiya

சத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து, இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்றார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைத்த அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.

அதன்பின்னர், ஜகதல்பூர் – ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைத்த அவர், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச மடிக்கணணிகள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அங்கிருந்து பிலாய் நகருக்கு சென்ற மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “முன்னர் இங்கு சாலைகள் கூட இல்லை. ஆனால், இப்போது தரமான சாலைகளுடன் கூடிய விமான நிலையமும் அமைய உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலை உதவும்.

நயா ராய்ப்பூர் நாட்டின் முதன்மையாக பசுமையான ஸ்மார்ட் சிட்டியாக விளங்குகிறது. தண்ணீர், மின்சாரம், தெரு விளக்குகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு என அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு விளங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு, நயா ராய்ப்பூர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)