Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் கடுமையான கொள்கையை நியாயப்படுத்தும் வெள்ளை மாளிகை

In உலகம்
Updated: 06:17 GMT, Jun 15, 2018 | Published: 06:17 GMT, Jun 15, 2018 |
0 Comments
1094
This post was written by : Risha

அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கையானது, சட்டவிரோத எல்லை தாண்டல்களை தடுப்பதற்கான ஒரு வழி என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்த கொள்கையை பாதுகாக்கும் வகையில் வெள்ளை மாளிகை நேற்று (வியாழக்கிழமை) இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சண்டர்ஸுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையே காரசாரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.

”இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது பைபிளில் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். தாய்மார்களிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது சரியென பைபிளில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது” என ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த சண்டர்ஸ், ”சட்டமா அதிபர் கூறியதை நான் அறியேன். ஆனால், சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பைபிள் கூறியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கைது செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து 800 குடும்பங்களின் பிள்ளைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)