Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்!

In இலங்கை
Updated: 11:51 GMT, Jun 19, 2018 | Published: 11:43 GMT, Jun 19, 2018 |
0 Comments
1069
This post was written by : Ravivarman

மன்னார் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வியாபார நோக்கத்திற்காக கற்றாழைச் செடிகள் களவாடப்பட்டு வருவதால் குறித்த தாவரம் முற்றாக அழிவடையும் நிலை தோன்றியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட வங்காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில் ‘கற்றாலம்பிட்டி’ என அழைக்கப்படும் பிரதேசத்தினுள் இயற்கை வளமான கற்றாழைத் தாவரங்கள் பரந்து காணப்படுகின்றன.

இக் கற்றாழைச் செடியானது பல மருத்துவ குணத்தையும் நன்மைகளையும் கொண்டதுடன் இதன் மூலம் பல விலையுயர்ந்த பாவனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், தாராபுரம், போன்ற கிராமங்களில் இருந்து இவ்வாறான செடிகள் வியாபார நோக்கத்திற்காக பிடுங்கப்பட்டு வெளிப் பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 14 ஆம் திகதி இனம் தெரியாத நபர்களால் வெளிப் பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக குறித்த கற்றாழைச் செடிகள் பிடுங்கப்பட்ட போது பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த முயற்சி தடுக்கப்பட்டது.

எனினும் தற்போது குறித்த கற்றாழைச் செடிகள் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட கற்றாலம்பிட்டி பகுதியில் மிச்சமாக இருந்த கற்றாழைச் செடிகளும் அழுகிய நிலையில் மீள்வளர்ச்சி அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றன.

எனவே குறித்த கற்றாலம்பிட்டி பகுதி கற்றாழைச் செடிகள் வளர்வதற்கு பொருத்தமான இடமாக இருப்பதனால் அப் பிரதேசத்தில் கற்றாழைச் செடிகளை மீள் நடுகை செய்ய உரிய தரப்பினர் உதவி செய்யவேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg