Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமர்நாத் யாத்திரை: இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 08:38 GMT, Jul 8, 2018 | Published: 08:38 GMT, Jul 8, 2018 |
0 Comments
1086
This post was written by : Litharsan

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த யாத்திரை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த லட்சுமி பாய் (வயது 54) என்பவர் யாத்திரையின்போது நேற்று (சனிக்கிழமை)  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு குறித்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இந்த ஆண்டு யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

40 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்திரிகர்களின் வாகனங்களைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)