Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட மாகாண அபிவிருத்தி குறித்து கனடாவுடன் சி.வி. பேச்சு

In இலங்கை
Updated: 07:39 GMT, Jul 11, 2018 | Published: 07:39 GMT, Jul 11, 2018 |
0 Comments
1108
This post was written by : Risha

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மைக்கன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையே வட மாகாண அபிவிருத்தி குறித்த முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர், வட மாகாண முதலமைச்சரை இன்று (புதன்கிழமை) கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போதே வட மாகாண அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரம்வரை நீடித்த சந்திப்பில் ரொறன்ரோ ஒப்பந்தம், வடக்கின் அரசியல் நிலைமைகள் ஆகியன குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ நகரையும் யாழ். நகரையும் இணைப்பதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கை யாழில் கடந்த ஆண்டு சம்பிரதாயபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது.

ரொறன்ரோ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் தற்போதைய நிலவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)