Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் கிடையாது: தம்பிதுரை

In இந்தியா
Updated: 09:36 GMT, Jul 14, 2018 | Published: 09:35 GMT, Jul 14, 2018 |
0 Comments
1039
This post was written by : Kemasiya

தமிழகத்தில் எந்த தேசிய கட்சிகளுக்கும்  இடம் கிடையாதென்றும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“காங்கிரஸ் பா.ஜ.க. கமியூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தமிழகத்தில் இடம்கிடைக்காது. இப்போதில்லை இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் தேசிய கட்சிகளுக்கு இந்தியாவில் இடம் கிடைப்பதில்லை கிடைக்கப் போவதுமில்லை” எனக் கூறினார்.

அடுத்த இடம்பெறும் தேர்தலில், தமிழகத்திலும் பா.ஜ.க. கால்பதிக்கும் என்று, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கருத்திற்கு பதில் கருத்தை முன்வைப்கும் முகமாக தம்பிதுரை மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)