Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆஃப்கான் பொலிஸ் தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல்!

In உலகம்
Published: 09:45 GMT, Jun 18, 2017 |
0 Comments
1316
This post was written by : Elakkiya

கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் பலர்  உயிரிழந்துள்ளதோடு பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஃப்கானிஸ்தானின் பக்தியா மாகாண தலைநகர் கார்டெஸில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் தலைமையக நுழைவாயிலில் கார்க்குண்டு ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தலைமையகத்திற்குள் நுழைந்த நான்கு பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஆஃப்கான் சிறப்பு படையினரின் தாக்குதலில் மற்றைய இரு பயங்கரவாதிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

மேற்படி தாக்குதல் சம்பவத்தின்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் குறைந்தபட்சம் ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் 20 பொதுமக்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.