மியன்மாரின் மேலும் இரு இராணுவ அதிகாரிகளுக்குப் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா!

மியன்மாரில் நடந்த இராணுவச் சதித் திட்டத்தில் ஈடுபட்ட இரண்டு தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
நாட்டை ஆட்சிசெய்ய இராணுவம் அமைத்த மாநில நிர்வாக சபையின் உறுப்பினர்களான லெப்டினன்ட் ஜெனரல் மோ மைன்ட் துன் (Moe Myint Tun) மற்றும் ஜெனரல் மயூங் மயூங் கியாவ் (Maung Maung Kyaw) ஆகியோருக்கே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்களின் விருப்பத்தை அடக்குவதற்கு முயற்சிப்பதற்கும் மற்றும் வன்முறையைச் ஏற்படுத்தும் இராணுவத் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே இதுவென அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கன் தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் வன்முறை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலட்சக் கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்ற நிலையில், மக்களில் இருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா இந்தப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
மியன்மாரில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில், ஆங் சான் சூகி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத அந்நாட்டு இராணுவத் தரப்பு அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அத்துடன், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தச் சதியானது, மியான்மர் முழுவதிலும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளதுடன் போராட்டங்காரர்களை அடக்க இராணுவத்தினர் வன்முறையைக் கையாண்டு வருகின்ற நிலையில் உலக நாடுகள் மியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்படுவதற்கு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.