அரச காணிகள், தனியார் அபகரிப்பை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்: கலையரசன்
In இலங்கை February 10, 2019 8:23 am GMT 0 Comments 1246 by : Yuganthini

மட்டக்களப்பு- நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்படு வருகின்றது. இதனை மீட்டெடுக்க மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டுமென பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 12 ஆவது கூட்டதொடர் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது
இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் இனங்காணப்பட்ட அரச காணிகள் இல்லாத நிலை ஏற்படுமென பிரதேச சபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அ.சுதர்சன் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
குறித்த கோரிக்கையையடுத்து தவிசாளர் பதில் தெரிவித்து பேசுகையில், “அரச காணிகள் தொடர்ச்சியாக கையகப்படுத்தப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் பொதுக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான அரச காணிகள் இல்லாதநிலை உருவாகும்.
கடந்த காலங்களில் அரச காணிகளை கையகப்படுத்துவதற்கு ஒருசில அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
ஆகையால் எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது
எனவே நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை மக்களின் பிரதிநிகளான பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் துணையோடுமஅடையாளப்படுத்தி பிரதேச சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதனூடாக அரச காணிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது பணிகளை முனைப்புடனும், வினைத்திறனுடனும் எடுக்க அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.