எத்தியோப்பியா-எரித்திரியா எல்லை திறப்பு விழா!
In உலகம் September 12, 2018 10:22 am GMT 0 Comments 1497 by : Farwin Hanaa
எத்தியோப்பியா-எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லை இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் பொருட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) எல்லைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது எல்லைப்பகுதி திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அஸ்மட், எரித்திரிய நாட்டு ஜனாதிபதி இசையாஸ் இஃப்வெர்கி ஆகிய இருவரும் கலந்துகொண்டு தமது நாட்டு உறவினை மேலும் மேம்படுத்தும் செயற்பாடுகளைப் பற்றி உரையாற்றியுள்ளனர்.
எத்தியோப்பிய தலைநகர் இட்டிஸ் அபபாவின் ஊடாக செங்கடல் துறைமுகத்தினை அடையும் குறுந்தூர வழியை எரித்திரியா நாட்டு மக்களுக்கு திறந்து விடுவதாகவும் எத்தியோப்பிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் புதுவருடத்தினை கோலாகலமாக இரு நாடுகளும் கொண்டாடப்போவதாகவும் இரு நாடுகளுக்கும் இடையில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்றும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஸ்மட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவிற்கும் எரித்திரியாவிற்கும் இடையில் இரு தசாப்தங்களாக இடம்பெற்று வந்த போரில் கடந்த 1998 தொடக்கம் 2000 வரையான காலப்பகுதியில் மாத்திரம் இரு நாடுகளிலும் 80,000இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.