ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரிட்டன் வெளியேறுவதை எவராலும் தடுக்க முடியாது : பிரதமர்
In இங்கிலாந்து September 13, 2019 1:32 pm GMT 0 Comments 1608 by : shiyani

ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதை எவராலும் தடுக்க முடியாது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் 31 க்கு முன்னதாக பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்ட முடியும் என்பதில் தாம் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆனால் என்ன நடந்தாலும் ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா நிச்சயமாக வெளியேறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டம், ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவை பெற்ற ஒப்பந்தமொன்று எட்டப்படாத பட்சத்தில் பிரெக்ஸிற்றை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை பிரெக்ஸிற் தாமதத்தை கோருமாறு பிரதமரை கட்டாயப்படுத்துகிறது.
ஆனாலும் எக்காரணத்தைக் கொண்டும் பிரெக்ஸிற்றுக்கு இன்னுமொரு தாமதத்தை வேண்டப்போவதில்லை எனும் பிரதமரின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பிரதமர் இன்று இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.