கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை
In உலகம் January 27, 2021 3:39 am GMT 0 Comments 1403 by : Dhackshala

கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம்விட, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்க் அணிந்து கொள்வது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடரும் என்றும் அடுத்த ஆண்டும் தொடரலாம் அத்துடன், நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு செயல் குழுவின் துணைத்தலைவராக லாரன்ஸ் வாங் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.