துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்!

கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஏதென்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தில், கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் பனகியோடோபஒவுலோஸ் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் ‘பல திசைகளில் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது’ என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இயற்கை எரிவாயு வளங்கள் மற்றும் அந்தந்த கடற்கரைகளுக்கு வெளியே உள்ள கடலில் கடற்படை செல்வாக்கு தொடர்பாக துருக்கியுடனான மோதலில் பிரான்ஸ் கிரேக்கத்தை கடுமையாக ஆதரித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கிரேக்கம் 18 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதைக் காணும், அவற்றில் பிரான்ஸின் வான்படையின் பாவனையில் உள்ள 12 விமானங்களும் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தில் உதிரிப்பாகங்களும், ஆயுதத் தளபாடங்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.