நல்லூர் மகோற்சவம்: தங்க மயிலேறி உலாவந்தார் முருகப்பெருமான்
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழா, பெருமளவான பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்திலும் வள்ளி – தெய்வானை மயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்
கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இத்திருவிழாவில் சுமார் ஒரு இலட்சம் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஆதவனின் விசேட செய்தியாளர் குறிப்பிட்டார்.
மகோற்சவ காலத்தில் நல்லூர் திருவிழா குறித்த முழுமையான தொகுப்பை, தினமும் இரவு 8.30இற்கு ஆதவன் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.