நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – LIVE UPDATE
In இலங்கை November 9, 2018 4:51 pm GMT 0 Comments 1936 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவுகளை வெளியிட்டுள்ளார் என அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
உடனுக்குடனான தகவல்களை கீழே பாருங்கள்,
11:42PM: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உத்தியோகப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேலும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
11.17PM: ஒரு தேசத்தின் தலைவிதியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாட்டின் முக்கியமான சூழ்நிலையில் முற்போக்கான எதிர்காலத்திற்கு மக்களின் உண்மையான சக்தி நிலையானதாக வழங்கப்படவேண்டும். இலங்கை மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என நம்புகிறேன். என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
11.00PM: இலங்கை நாடாளுமன்றம் / பொது தேர்தல் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் இம்மாதம் 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
10.53PM: வர்த்தமானி அச்சிடப்பட்ட பின்னரே அடுத்த தேர்தலைப் பற்றி பேச முடியும் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
10.52PM: உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
10.45PM: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையை கடுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
10.43PM: அரசாங்க அச்சு திணைக்களத்தின் வளாகத்தில் பல அமைச்சர்கள்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்தவும் உறுதிப்படுத்தினார். வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகும்
நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று நள்ளிரவு வெளியிடவுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களதிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.