நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்!
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல்நிலை மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன் உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் திலகராஜ், அரவிந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், கூட்டணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.