நெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ்: அலெக்ஸ் டி மைனர் வெற்றி

நெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மைனர், வெற்றிபெற்றார்.
மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்த இப்போட்டியில், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் டி மைனர், ரஷ்யாவின் முன்னணி வீரரான ஆண்ட்ரே ரூபெலவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸ் டி மைனர் முதல் செட்டை 4-1 என எளிதாக கைப்பற்றினார்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆண்ட்ரே ரூபெலவ், அலெக்ஸ் டி மைனருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட், டை பிரேக் வரை நீடித்தது.
இதில் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 4-3 என ஆண்ட்ரே ரூபெலவ், செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து, ஆக்ரோஷமாக மீண்டெழுந்த அலெக்ஸ் டி மைனர், அடுத்த இரண்டு செட்டுகளையும் 4-1, 4-2 என்ற செட் கணக்குகளில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.