பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நிர்வாணப்பூங்கா ஒன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தினை முன்னிட்டு இந்த நிர்வாணப்பூங்கா திறக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த பூங்காவானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரிஸின் Bois de Vincennes பூங்காவின் ஒரு பகுதி கடந்த வருட கோடை காலத்தின் போது நிர்வாணப்பிரியர்களுக்காக திறந்திருந்தது.
இந்நிலையில், இந்தவருடமும் இந்த பூங்காவில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7,300 சதுர மீற்றர் பரப்பளவில், நிர்வாணப்பிரியர்களுக்கான விளையாட்டுத்திடல், ஓய்வு இருக்கைகள் என பூங்காவின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி, காலை 8 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை அனைத்து நாட்களும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.