பிரான்சில் நடைபெற்ற இராட்சத உருவங்கள் கொண்ட இயந்திரங்கள் கண்காட்சி!
In ஐரோப்பா November 4, 2018 7:16 am GMT 0 Comments 1288 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரில் நடைபெற்ற இயந்திர கண்காட்சியில் மிருக வடிவிலான இராட்சத உருவங்கள் கொண்ட இயந்திரங்கள் வீதிகளில் காட்சிக்கு விடப்பட்டது.
இதன் போது இராட்சத சிலந்தி, மனிதனின் உருவமும் எருதின் தலையும் கொண்ட இராட்சத மைனோட்டர் ரோம்மும் கட்சி படுத்தப்பட்டது.இந்த நிகழ்வினை காண பெருமளவிலான பொதுமக்கள் வருகை தந்துடன் இதனை கண்டு வியப்பு அடைந்தனர்.
மேலும் இதில் 43 அடி உயரமுடைய ஆரியானா என்ற சிலந்தி 65 அடி தூரம் வரை கால் பரப்பி பயணிக்க கூடிய 38 டன்கள் எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டது. இதே போல் 46 அடி உயரம் கொண்ட ஆஸ்டேரியன் என்ற மற்றொரு பூச்சி உயிரினமும் காண்பிக்கப்பட்டது.
அத்துடன் இந்த இயந்திரங்களை இயக்க சுமார் 12 இயக்குனர்கள் உள்ளனர். முடிந்த அளவு உயிருடன் இருப்பது போன்ற மாயையை உருவாக்க அவர்கள் இந்த பூச்சிகளின் உடலின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கணக்கிட்டனர்.
இந்த கண்காட்சியானது அனைத்து மக்களையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.