யுத்த பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!
In இலங்கை November 9, 2018 10:15 am GMT 0 Comments 1491 by : Yuganthini
யுத்தத்தினால் இழப்புகளை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. இதன்போது 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொகை 334 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் உயிரிழந்தோர், அங்கவீனமானவர்கள், சொத்துக்களை இழந்தோர் மற்றும் சேதமாகிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு குறித்த இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது தோற்றம் பெற்றுள்ள புதிய அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதனை எவராலும் இனிமேல் கவிழ்க்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, வீட்டுத்திட்டங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூர்த்தி பயனாளிகளிற்கு சமுர்த்தி கொடுப்பனவு என்பன விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.