மட்டு. செட்டிபாளையத்தில் இளம் குடும்ப பெண் சடலமாக கண்டெடுப்பு !
In இலங்கை February 22, 2021 11:31 am GMT 0 Comments 1130 by : Vithushagan

திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில் 26 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளயம் பிரதேசத்தை சேர்ந்த செனஸ்சங்கரி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.