மனுக்கா தேனில் செயற்கை இரசாயனம் – மூன்று வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட நிறுவனம்!

தேனில் இரசாயனம் கலக்கப்பட்டமையினை நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது.
Evergreen Life என்ற குறித்த நிறுவனத்தின் தேனில் அங்கீகரிக்கப்படாத இரசாயனங்கள் இருந்ததால், நியூசிலாந்து அரசாங்கம் அதை கடந்த 2016ஆம் ஆண்டு தடை செய்திருந்தது.
இந்தநிலையில் தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், தேனில் இரசாயனம் கலக்கப்பட்டமையினை குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
பானத்தில், மருந்தில், உணவில், அழகுப் பராமரிப்பில் என தேனுக்குப் பலவகைப் பயன்கள் உண்டு. நியூசிலாந்து, அவுஸ்ரேலியாவில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூவிலிருந்து சேகரிக்கப்படுவது மனுக்கா தேன்.
அந்தப் பூவகை சற்று குறைந்த எண்ணிக்கையில் மலரும் என்பதால், மனுக்கா தேன் மற்ற தேன் வகைகளுடன் ஒப்பிடுகையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மனுக்கா தேன் மற்ற வகைத் தேன்களைவிட நுண்ணுயிர் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்டது என நம்பப்படுகிறது.
இந்தநிலையில் சர்ச்சைக்குரிய நிறுவனம் தான் விற்கும் மனுக்கா தேனில் செயற்கை இரசாயனங்களைச் சேர்த்து, அதிலுள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்தமையினை ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.