விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட்
In இந்தியா November 26, 2019 3:22 am GMT 0 Comments 1388 by : Yuganthini

இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
மேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்.
இது 5 ஆண்டுகள் செயற்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள், இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.