2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் ரக்ஸி சேவைகள்!

பரிஸில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி இடம்பெறவுள்ளதை முன்னிட்டு பறக்கும் ரக்ஸி சேவைகளை அறிமுகம் செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
பறக்கும் ரக்ஸிகள், விமான நிலையத்திலிருந்தே பார்வையாளர்களை போட்டி இடம்பெறும் அரங்கங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்து வழியாகவும், ரயில் மூலமாகவும் விளையாட்டு அரங்கங்களுக்குச் செல்ல 1 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என்பதனால் இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பறக்கும் ரக்ஸி சேவையைப் பயன்படுத்தினால், பயணநேரம் கணிசமாகக் குறையும் என நம்பப்படுகிறது. தற்போது பறக்கும் ரக்ஸி சேவைகளின் முன்னோட்டம் இடம்பெறுகிறது. அவற்றில் அதிகபட்சம் நால்வர் பயணம் செய்யலாம்.
திட்டத்தைச் செயல்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.
– பறக்கும் ரக்ஸி சேவையைச் அறிமுகப்படுத்தும் முன் அவற்றுக்கென ஆகாயத்தில் தனிப்பட்ட பாதையை அமைக்கவேண்டும். ஆகாயப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ரக்ஸிகள் பறக்க வேண்டும்
– போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஏற்ப ரக்ஸிகளின் மின்கலனும், அவற்றின் உணர்கருவிகளும் மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
– பறக்கும் ரக்ஸி சேவைகள் போக்குவரத்து நெரிசலை எந்த அளவுக்குக் குறைக்கும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.