Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்த சஷ்டி கவசம் எழுதியது யார்?

In ஆன்மீகம்
Updated: 05:48 GMT, Nov 2, 2015 | Published: 05:34 GMT, Nov 2, 2015 |
0 Comments
1604
This post was written by :

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர், மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிர, அவர் எங்கு, யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது. கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில் சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. மேலும், சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம்தான்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg