Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாசிப்பருப்பு முருக்கு

In
Updated: 07:30 GMT, Nov 2, 2015 | Published: 07:30 GMT, Nov 2, 2015 |
0 Comments
1434
This post was written by :

உடலுக்கு பல நன்மையும் குளிர்மையும் தரும் பாசிப்பயறினை கொண்டு பண்டிகை காலத்தில் செய்யப்படும் சுவையான முருக்கு செய்முறையினை இன்று உங்களுக்காக தருகின்றோம். செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு மாவு – 1-1/2 கப்
அரிசி மாவு – 5 கப்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான  அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முலில் அரிசியினை கழுவி தனியே நன்றாக ஊறவைக்கவேண்டும். அதன் பின்னர் பாசிப்பயறினை நன்றாக வருத்து எடுத்து சுடு ஆறிய பின்னர் நன்றாக மாவாக அரைத்து கொள்ளவேண்டும். இதன் பின் ஊறவைத்த அரிசியினை இடித்து அல்லது அரைத்து மாவாக்கி பின் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மாவு வகைகள் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு உப்பு, பெருங்காயப்பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் முறையே சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்தக்கலவை மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து வைத்து வாய் அகன்ற வானலியில் சூடான எண்ணெயில் போட்டு இருபக்கமும் பொரிந்து வந்தபின்னர் எடுத்து பறிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg