Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரங்கிலிருந்து பாதுகாப்பு பெற சில வழிகள்

In
Published: 06:55 GMT, Nov 3, 2015 |
0 Comments
1599
This post was written by :
Sirangu

சிரங்கு ஒரு தோல் நோயாகும். இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும். இந்த நோய் மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் பரவக்கூடியது. இத்தகைய நோயை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். அவ்வாறான சில வழிகளைப் பார்ப்போம்.

01. சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால் அது தோலை மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

02. ஒரு தேக்கரண்டி சந்தனம் மற்றும் ஒரு தேக்கரண்டி கற்பூரம் என்பவற்றை; சேர்த்த கலவையை சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமடையும்.

03. குளித்த பிறகு சிரங்கு புண் இருக்கும் இடத்தில் ஒலிவ் எண்ணெயை தடவினால் அது படிப்படியாக குணமடையும்.

04. புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாறை தடவலாம்.

05. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலையும் சேர்த்து அரைத்து, அதை சிரங்கின் மேல் தடவி வந்தால் விரைவாக அது குணமடையும்.

06. ஒரு இரும்பு பாத்திரத்தில் 200 கிராம் கடுகு எண்ணெய் மற்றும் 50 கிராம் வேப்பிலையை சேர்த்து, அந்த இலை கருப்படையும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை குளிர வைத்து, தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவினால் அது குணமடையும்.

07. பப்பாளி பழ விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை தடவினால் அது சிரங்கு புண்ணால் ஏற்படும் அரிப்பிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.

08. அதிக ரசாயணப் பொருட்கள் இருக்கும் சோப்பை தவிர்ப்பது நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg