Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட அயர்லாந்தில் உள்ள மிச்செலின் ரயர் தொழிற்சாலை 2018 இல் மூடப்படுகின்றது

In வணிகம்
Updated: 16:14 GMT, Nov 3, 2015 | Published: 16:05 GMT, Nov 3, 2015 |
0 Comments
1397
This post was written by : S.K.Guna

வட அயர்லாந்தின் Ballymena நகரில் உள்ள மிச்செலின் (Michelin) ரயர் தொழிற்சாலை 2018 நடுப்பகுதியில் மூடப்படுவதாக தொழிற்சாலை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதனால் 860 பணியாளர்கள் வேலையை இழக்கவுள்ளனர்.

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்கையில்; Ballymena நகரில் உள்ள மிச்செலின் தொழிற்சாலையில் ரயர் உற்பத்தியை தாம் 2018 மத்திய காலப்பகுதியில் நிறுத்தவுள்ளதாகவும் அதேவேளை தொழிற்சாலையை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முதலீட்டு வசதிகளின் அடிப்படையில் Dundee மற்றும் Stoke on Trent ஆகிய இடங்களில் புதிதாக தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2007 இல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பின்னர் ட்ரக் டயர்களுக்கான தேவை குறைந்து ஐரோப்பிய சந்தைகளில் ஐந்து மில்லியன் ரயர்களுக்கான கேள்வி குறைந்துள்ளது. இதனால் குறைந்த அளவிலான ரயர் உற்பத்தியே நடைபெறுவதாகவும் மிச்செலின் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிச்செலின் ரயர் தொழிற்சாலையில் சில ஆண்டுகளாக ரயர் உற்பத்திக்காக உயர்ந்த அளவில் எரிபொருள் செலவு ஏற்படுவதாகவும் மேலும் ஆசிய ரயர் உற்பத்தி நிறுவனங்களால் சந்தையில் கடும்போட்டி ஏற்பட்டதன் காரணமாகவும் ரயர் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிற்சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Dundee மற்றும் Stoke on Trent ஆகிய இடங்களில் புதிதாக திறக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg