Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் பண்பாடும் தீபாவளி கொண்டாட்டமும்

In ஆன்மீகம்
Updated: 06:41 GMT, Nov 5, 2015 | Published: 06:41 GMT, Nov 5, 2015 |
0 Comments
2223
This post was written by :

தீயசக்தியாக இருந்த நரகாசுரனை வீழ்த்தி கிருஷ்ண பகவான் வெற்றி பெற்ற திருநாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை அழித்தாலும், அவனது விருப்பத்தை ஏற்று, கொண்டாடும் நாளாகவும் தோன்றியது தான் தீபாவளி என்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபஒளி அலங்காரத்துடன் இந்த தீபாவளி பண்டிகையை நாம் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

பழங்காலம் முதலே தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. தீபாவளிக்கென்று தனி வரலாறுகளும் உண்டு.  தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்தங்கள் கொண்டு சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

இலங்கை, மற்றும் இந்தியாவில் இருந்து சென்ற வணிகர்கள் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடினர். ஆங்கிலேயர், பிரெஞ்சு, டச்சுக்காரர்கள் இதில் அதிக விருப்பம் காட்டவில்லை என்றாலும் கூட  தீபாவளி உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கவில்லை என்று வரலாறுகள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் தீபாவளிகளிக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதாக சான்றுகள் இல்லை. வெடிவெடிக்கும் பழக்கம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆரம்பித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வெடிகள் பல்வேறு விதமாக மாறிவிட்டன. எனவே, விழாநாட்களில் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புத்தாடைகள் அணிந்து தீபாவளியை கொண்டாட வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg