Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோழர்கள் விஷ்ணு கோயில் கட்டினார்களா?

In ஆன்மீகம்
Updated: 06:31 GMT, Nov 6, 2015 | Published: 06:31 GMT, Nov 6, 2015 |
0 Comments
1242
This post was written by :

தமிழகத்தில் வாழ்ந்த முப்பெரும் அரசர்களில் சோழமன்னர்களுக்கு தனி வரலாறு உள்ளது. அவர்கள் ஆட்சி காலத்தில் முன்னோர்கள் சாபம் காரணமாக ஆயிரம் சிவன் கோயில்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதால், தமிழகம் மட்டுமில்லாமல், அவர்கள் ஆட்சி செய்த பகுதியில் எல்லாம் திராவிட கலை நுட்பத்தில் சிவன் கோயில்கள் கட்டினர்.

அவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களாக இன்றளவும் பக்தர்களின் போற்றுதலுடன் உள்ளது. பெங்களூருவில் உள்ள எலகங்காவை மையமாக கொண்டு அப்பகுதியை சோழ மன்னர்கள் ஆட்சி நடத்திய போது எலகங்கா, அல்சூர், தொம்மலூர் உள்பட அதை சுற்றியுள்ள பகுதியில் விஷ்ணுவை போற்றி வணங்கும் வைணவர்கள் அதிகம் வாழ்ந்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று சொக்கநாதன் என்று சிவபெருமானை அழைப்பது போல், சொக்கநாத பெருமாள் என்ற பெயரில் விஷ்ணு கோயில் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கோயிலை சுற்றி அவர்கள் தமிழ் மொழியில் செதுக்கியுள்ள கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.

ராஜராஜசோழன் ஆட்சியில் இக்கோயில் கட்டியுள்ளதாக பெங்களூரு வரலாற்றை ஆய்வு செய்துள்ள இதிகாச ஆராய்ச்சியாளர் பி.என்.சுந்தர்ராவ் தனது வரலாற்று சுவடில் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg