Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துர்க்கையின் அருளால் பயம் நீங்கும் மந்திரம்

In ஆன்மீகம்
Updated: 09:13 GMT, Nov 8, 2015 | Published: 07:05 GMT, Nov 8, 2015 |
0 Comments
1324
This post was written by :

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி மசேஷ ஜந்தோ!

ஸ்வஸ்தை ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்யது க பயஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா (2)

ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய். சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய்.

வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? (வேறு ஒருவருமில்லை) இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg