Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதட்டை அழகாக காட்டுவது எப்படி?

In
Updated: 08:11 GMT, Nov 9, 2015 | Published: 08:11 GMT, Nov 9, 2015 |
0 Comments
1451
This post was written by :

ஒருவரது முகத்தில் கண்களுக்கு இணையானவை உதடுகள். உள்ளத்து உணர்வுகளை கண்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றனவோ, அதே போலத்தான் உதடுகளும். நாம் சோகமாக இருந்தால் உதடுகள் கீழ் நோக்கியும் சந்தோஷப்பட்டால் மேல் நோக்கியும் இருக்குமாம். முகத்துக்கான மேக்கப்பில், உதடுகளுக்கான கவனிப்பு ரொம்பவே ஸ்பெஷல்! கொஞ்சம் அசந்தாலும் முகத்தின் அமைப்பை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிக் காட்டக் கூடியது லிப் மேக்கப்.

படிப்படியாக லிப்ஸ்டிக் போடும் முறையினை பார்க்கலாமா?

1. முதலில் உங்கள் உதடுகளை தயார்படுத்த வேண்டும். மெல்லிய, மிருதுவான சிறிய தூரிகை கொண்டு உங்கள் உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். தூரிகையில் சர்க்கரைப் பாகினை தொட்டு உதடுகளைத் தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த துணியால் உதடுகளைத் தொட்டுத் துடைத்து, வட்டமாக மசாஜ் செய்யவும்.

2. உதடுகளின் மேல் தரமான லிப் பாம் தடவவும். எவ்வளவு நேரம் அது நீடிக்கிறதோ, அவ்வளவு நேரம் உதடுகள் மிருதுவாக இருக்கும். உதடுகளுக்கு மேக்கப் போடுவதற்கு முன்பாக இதைச் செய்ய வேண்டும்.

3. மிக மென்மையாக லிப் பாமை துடைத்து எடுக்கவும். இப்படிச் செய்தால்தான் லிப்ஸ்டிக் சரியாக உதட்டில் பதியும்.

4. அதன் பின் உதடுகளின் மேல் பவுண்டேஷன் தடவவும். உதடுகளை நன்கு விரித்து சிரித்தபடி வைத்துக் கொண்டு பவுண்டேஷன் தடவினால், இடைவெளி இல்லாமல் அது படியும்.

5. பவுண்டேஷனை ஒற்றி எடுக்கவும். இதனால் உதட்டின் நிறத்தினை அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.

6.உங்கள் உதடுகளின் இயல்பான நிறத்துக்கு நெருக்கமான நிறத்தில் உள்ள லிப் பென்சிலால் உதடுகளை வரைந்து கொள்ளவும்.

7. லிப்ஸ்டிக்கை அளவாக உதட்டில் தடவவும். உதடுகளின் நடுப்பகுதி, வெளிப்புற ஓரங்கள் மற்றும் அடிப்பகுதிகளை கவனமாக நிரப்பவும்.

8. திட்டுத்திட்டாக உள்ள இடங்களை சீராக்கும்படி லிப்ஸ்டிக்கை சரி செய்யவும்.

9. லிப்ஸ்டிக்கை ஒற்றி எடுத்து கடைசியாக இன்னொரு தடவை லிப்ஸ்டிக்கினை தடவவும்.

10. சிறிய தூரிகையின் உதவியால் கன்சீலரை தொட்டு, உதடுகளைச் சுற்றித் திருத்தப்பட வேண்டிய இடங்களை சரி செய்யவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg