Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் வேலையற்றோர் வீதம் 1.75 வீதத்தால் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 10:50 GMT, Nov 11, 2015 | Published: 10:50 GMT, Nov 11, 2015 |
0 Comments
1266
This post was written by : hoshika

பிரித்தானியாவில் கடந்த 7 ஆண்டுகளாக வேலையற்றோர் வீதம் வீழ்ச்சியடைந்துகொண்டு செல்லும் நேரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் 5.3% வீதத்தால் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதாக புதிய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இதற்கு முன்னர் குறைந்த அளவிலான வேலையற்றோர் வீதம் 2008 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் காணப்பட்டிருந்ததாக தேசிய புள்ளிவிவரவியல் அலுவகலம் கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான மூன்று மாதகாலத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 103,000 ஆல் குறைவடைந்துள்ளது.

பிரித்தானிய மக்கள் தொகையில் 31.21 மில்லியன் மக்கள் வேலை செய்பவர்களாக உள்ளனர். மேலும் ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டாம் காலாண்டில் இருந்ததை விட இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg