Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சபரி மலை பக்தர்களுக்காக அதிகாலையில் நடை திறப்பு

In ஆன்மீகம்
Updated: 08:33 GMT, Nov 19, 2015 | Published: 05:42 GMT, Nov 19, 2015 |
0 Comments
2328
This post was written by :

மண்டல பூஜையை முன்னிட்டு, கார்த்திகை முதல் நாளான நேற்று சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மிகவும் புனிதமாக கருதப்படுகின்ற இடம் சபரிமலை. இங்கு வரும் அனைவரும் சமம். ஆகவே புனித பூமியான சபரிமலையை சுத்தமாக வைத்திருப்பது அனைத்து பக்தர்களின் கடமையாகும்.

பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை கழிவுகளாக சபரிமலையில் இட்டு செல்லாமல், சபரிமலை தூய்மையினை மனதில் கொண்டு அவர்களாகவே நீக்கம் செய்து சபரிமலையினை சுத்தமாக வைக்க உதவ வேண்டும். இரு முடி கட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள், கண்டிப்பாக 41 நாட்கள் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்வதால், உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு புதுப்பொலிவும் கிடைக்கிறது. அதுவே அய்யப்பனுக்கு செய்யும் மரியாதையாகும். சபரிமலை அய்யப்பன் கோவிலில் பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நெறிமுறைகளில் ஒன்றான 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கான தடை உத்தரவை கண்டிப்பாக பெண்கள் பின்பற்ற வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg