Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னனேற்ற பாதையில் செல்லும் ஏற்றுமதி வர்த்தகம் – அமைச்சர் சுஜீவ சேனசிங்க

In வணிகம்
Updated: 11:54 GMT, Nov 22, 2015 | Published: 11:54 GMT, Nov 22, 2015 |
0 Comments
1277
This post was written by :

சர்வதேச ரீதியாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியினை எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் 5 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியினை விட ஐந்து மடங்கு அதிகரிப்பு இதுவென அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகதுறையின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சீனா, கொரியா தாய்வான் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் ஆடைவகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இது தவிர, ஆடை தொழிலுக்கு புடவை வகைகளை விநியோகம் செய்யும் 50 இற்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சகல துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பட்டயகணக்காளர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கருத்தினை வெளிப்படுத்தினார்.
ஏற்றுமதியினை மேம்படுத்துவதற்கு துரித போக்குவரத்து முறைமை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, துறைமுகங்கள் மற்றும் சுங்கம் போன்ற துறைகள் நவீன வசதியுடன் தொழில்படுவதற்கு ஏற்ற முறையில் மறுசீரமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg