Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தட்டு வடை

In
Updated: 04:14 GMT, Nov 23, 2015 | Published: 04:14 GMT, Nov 23, 2015 |
0 Comments
1754
This post was written by : Elakkiya

தேவையான பொருட்கள்:
கோதுமை மா- ஒரு கிலோ

தோல் நீக்கிய உடைத்த உழுந்து- கால் கிலோ

பெருஞ்சீரகம்

கருவேப்பிலை- சிறிதாக நறுக்கியது

தேங்காய் எண்ணெய்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:
முதலில் தோல் நீக்கிய உடைத்த உழுந்தை ஒரு மணிநேரம் முன்பு ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்னர் தண்ணீரை நீக்கி உழுந்தையும் கோதுமை மாவையும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நீர் விடாமல் கலந்து கொள்ளவும். கலந்த மாவில் அரைக் கப் எண்ணெய் விட்டு மேலும் நன்றாக பிசைய வேண்டும்.

பின்பு அதில் சிறிது சிறிதாக நீர் விட்டு பாத்திரத்தில் ஓட்டாதவாறு பிசைய வேண்டும். பின்னர் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெலிதாக தட்டையாக்க வேண்டும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் தட்டி வைத்ததை பொன்னிறத்தில் பொரித்து எடுக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg