Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலிநிவாரணி மாத்திரைகளின் பக்க விளைவுகள்

In
Updated: 04:31 GMT, Nov 23, 2015 | Published: 04:31 GMT, Nov 23, 2015 |
0 Comments
1367
This post was written by : Elakkiya

அனைவரின் வீட்டிலும் அப்பா அல்லது அம்மாவின் உருவத்தில்; ஓர் மருத்துவர் இருக்கிறார். என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் ஒரு மாத்திரையை போட்டு விடுவார்கள். சிலர், அவர்களது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். உடல் வலி, தலைவலி என அனைத்துக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளும் நாம் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து சிந்திப்பதில்லை. சிலர் பக்க விளைவுகள் குறித்து அறிந்தும் இருக்க மாட்டார்கள்.

வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதத்தை ஏற்படுத்துகின்றது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மது அருந்துவோர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ளவே கூடாது.

அஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது.

வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

வலிநிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ளவே கூடாது, கருவுற்ற முதல் இருபது வாரங்களில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
அத்துடன் அடிக்கடி வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு வலிநிவாரணி மாத்திரையும் கூட ஓர் காரணமாக இருக்கிறது. மேலும் இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவே வலி நிவாரணி மாத்திரைகளை இயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg