Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- கட்டார் இருதரப்பு வர்த்தகம் உயர் மட்டத்துக்கு தள்ளப்பட வேண்டும்: ரிஷாட் பதியுதீன்

In வணிகம்
Updated: 07:49 GMT, Nov 23, 2015 | Published: 07:49 GMT, Nov 23, 2015 |
0 Comments
1205
This post was written by : Elakkiya

இலங்கை மற்றும் கட்டாருக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் உயர் மட்டத்துக்கு தள்ளப்பட வேண்டும் என இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்டார் வெளியுறவுத்துறையின் பிரதி அமைச்சர் மொஹமட் பின் அப்துல்லாஹ் அல் றுமைஹி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாலில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தில் 78 மில்லியன் டொலர் தொகை இலாபமாக ஈட்டப்பட்டுள்ளது. இந்த தொகையானது 18 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் இலங்கை உயர்ந்த அளவில் ஏற்றுமதியினையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலும் வரையறுக்கப்படாத வர்த்தக சாத்தியம் இருப்பதாகவும் இதனை விரிபுபடுத்துவதற்கு இதுவே தகுந்த தருணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டார் வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg